Loading...
14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவிப்பு
சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவிப்பு

14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாநிலம் முழுவதும் நீதித்துறைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரவும், பொதுமக்கள் எளிதில் நீதியைப் பெறவும் இந்த புதிய நீதிமன்றங்கள் பெரிதும் வழிவகுக்கும்.

போக்சோ

அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்

புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களின் கீழ், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் பிரத்யேக போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இச்சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீதான வழக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT