LOADING...
ரூ. 1,000 பொங்கல் பரிசு மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகள்
எடப்பாடி பழனிசாமி இன்று மூன்றாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்

ரூ. 1,000 பொங்கல் பரிசு மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
12:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மூன்றாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் வரி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குடும்பச் சுமையைக் குறைக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை கருணைத் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சலுகை

இளைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான சலுகைகள்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும். நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம் கைத்தறிக்கு 450 யூனிட்டுகளாகவும், விசைத்தறிக்கு 1,400 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்படும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 12,000-ஆக உயர்த்தப்படும் என்றும், நகரப்புற நடைபாதை வியாபாரிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Advertisement