வைரல் செய்தியாக பரவும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமணம்
வைரல் செய்தி - யூடியூப் சேனலில் பிரபல ரெஸ்டாரண்ட்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ கூறி பிரபலமானவர் தான் இர்ஃபான். இவருடைய இந்த உணவு ரிவியூ'விற்கு ரசிகர்கள் ஏராளம். உணவின் சுவை குறித்து மட்டுமல்லாமல், அந்த உணவுகள் எங்கு கிடைக்கும் என்னும் தகவலையும் இவர் தனது பாலோவர்ஸ்களுக்கு வழங்குவார். மேலும் இந்தியாவிற்குள் மட்டுமல்லாமல் துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள பிரபல உணவுகளின் ரிவியூ'க்களையும் அவர் வழங்கியுள்ளார். சமீபகாலமாக இவர் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூபில் பிரபலங்களோடு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிட்டு ரிவியூ கொடுத்துவந்தார். இந்நிலையில் இவருக்கு 2தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவருடைய திருமண புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவுச்செய்ததையடுத்து வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.