
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், துணை நடிகர், கேமியோ என எவ்வித வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை ஏற்று மிக சிறப்பாக நடித்து ரசிகர் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் மூலம் வில்லனாக களமிறங்கினார்.
அதனை தொடர்ந்து, இவர் விஜயுடன் இணைந்து 'மாஸ்டர்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவிலான பாராட்டுகளை பெற்றார்.
தொடர்ந்து, கமலின் 'விக்ரம்' படத்திலும், தற்போது ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இதனிடையே சிரஞ்சீவி படமான 'சைரா' மூலம் தெலுங்கிலும் விஜய் சேதுபதி கால்பதித்துள்ளார்.
சேதுபதி
'லாபம்' என்னும் தமிழ் படத்தில் கமிட்டான விஜய் சேதுபதி
அதன்படி 'உப்பென்னா' என்னும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இதில் அவருக்கு மகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருப்பார். இப்படம் பெருமளவில் வெற்றி பெற்று தேசிய விருதையும் பெற்றது.
இந்நிலையில் தற்போது இவர் 'லாபம்' என்னும் தமிழ் படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்று படக்குழு கூறியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
அவர்,"ஏற்கனவே தெலுங்கில் 'உப்பென்னா' திரைப்படத்தில் அவருடன் தந்தையாக நடித்து விட்டேன். அப்படியிருக்கையில் அவருடன் மீண்டும் எப்படி ஜோடியாக நடித்து ரொமான்ஸ் செய்ய முடியும். அவருக்கு என் மகள் வயது தான் இருக்கும். அதனால் தான் நாயகியை மாற்றும்படி படக்குழுவிடம் கேட்டுக்கொண்டேன்"என்று தெரிவித்துள்ளார்.