Loading...
வசூல் வேட்டை நடத்தும் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியீடு
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

வசூல் வேட்டை நடத்தும் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியீடு

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
07:55 pm

செய்தி முன்னோட்டம்

'ஆவேஷம்' படப் புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'சீன்'. இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பிரபல நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 88 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், வரும் டிசம்பர் 4-ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

வசூல் 

ரூ. 260 கோடி வசூல் சாதனை

இப்படத்தில் சூர்யா டி.எஸ்.பி இன்பராஜ் என்ற காவல்துறை அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருடன் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லேன் கே. கஃபூர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள் குறித்த காவல்துறை விசாரணையும், அந்த வழக்குகள் ஏற்கனவே நடந்த பழைய சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புடையதாக மாறுகிறது என்பதையும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் சொல்லியுள்ளது.

உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

ADVERTISEMENT