விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு
விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களால் பெரிதும் பார்க்கப்படும் 24 மணி நேர சேவையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு சேனல் ஆகும். இத்தொலைக்காட்சியில் மக்களிடம் பொழுது போக்குக்காக பலவிதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நெடுந்தொடர்கள் ஒளிபரப்புவதுடன் ஆன்மிக நிகழ்ச்சிகள் , நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ, மற்றும் விருதுகள் போன்ற போன்ற பல விதனமான நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் ஒரு தீரா இடத்தைப் பெற்று உள்ளன. 2016 -ல் 'விஜய் சூப்பர். என்று அழைக்கப்படும் சேனலும், 2020-ல் 'விஜய் மியூசிக்' என்று அழைக்கப்படும் சேனலும் டிஸ்னி ஸ்டார் மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து, விஜய் டிவி மக்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே விஜய் டிவி அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து நேற்று 'அனைவரின் கவனத்திற்கு' என்ற தலைப்பின் கீழ் ஒரு பதிவு இட்டது. அதில் கூறியதாவது, "எங்கள் சேனலில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான, பங்கேற்பதற்கான வாய்ப்பை, பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ வழங்கவோ செயல்படத்தவோ நாங்கள் அதிகாரம் வழங்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகளை நம்பி பணம் கோருவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய தவறான நபர்கள் செலுத்தப்பட்ட பணம் அல்லது பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்படும் / ஏற்பட்ட எந்த விதமான இழப்பு/சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது அல்லது கடமைப்பட்டதாக இருக்காது" என்று கூறியுள்ளது