Loading...
96 திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் சேதுபதி - திரிஷா நடித்த காதல் காவியம் மீண்டும் திரையரங்குகளில் அக்டோபர் 9 அன்று வெளியீடு
96 திரைப்படம் அக்டோபர் 9 அன்று ரீ-ரிலீஸ்

96 திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் சேதுபதி - திரிஷா நடித்த காதல் காவியம் மீண்டும் திரையரங்குகளில் அக்டோபர் 9 அன்று வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
12:58 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்த '96' திரைப்படம், வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மீண்டும் உலகளவில் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், பள்ளிக்காலக் காதல், எதிர்பாராத பிரிவு மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் பள்ளி நண்பர்களின் சந்திப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவானது. வழக்கமான காதல் கதைகளைப் போலன்றி, நிறைவேறாத காதலின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய விதம் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது.

மெல்லிசை

கோவிந்த் வசந்தாவின் மெல்லிசை மாயாஜாலம்

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் மிக முக்கியப் பங்காற்றின. 'காதலே காதலே', 'தி லைஃப் ஆஃப் ராம்' போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.

திரையரங்கில் இப்பாடல்களையும், காட்சியமைப்புகளையும் மீண்டும் ரசிக்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் மறுவெளியீடு குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.

இரண்டாம் பாகத்திற்கான கதைக்களம் உருவானால் அதில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவே மீண்டும் நடிப்பார்கள் என இயக்குநர் பிரேம்குமார் முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT