Loading...
ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய் சேதுபதி பளிச் பேச்சு
ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்கு மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய் சேதுபதி பளிச் பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
02:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இனிமேல் எந்தவொரு திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளித்து கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். யூடியூபில் தொகுப்பாளர் கோபிநாத் உடனான உரையாடலின் போது விஜய் சேதுபதி இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

பாதிப்பு

சிறிய பட விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பு

கெஸ்ட் ரோல்களில் நடிப்பதைத் தவிர்ப்பதற்கான வணிக ரீதியிலான காரணத்தைக் குறிப்பிட்ட விஜய் சேதுபதி, "நான் இனிமேல் கெஸ்ட் ரோல்களில் முற்றிலும் நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

ரஜினி சாருக்காக ஜெயிலர் 2 படத்தில் மட்டுமே இதற்கு விதிவிலக்கு அளித்தேன்.

ஜெயிலர் 2 போஸ்டரில் எனது புகைப்படம் இடம் பெற்றாலும், மக்கள் ரஜினி சாரை மட்டுமே கவனிப்பார்கள்.

ஆனால் சிறிய திரைப்படங்களில் நான் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் போது, அதை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.

அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் வர்த்தகத்தை பெரிய அளவில் பாதிக்கிறது." என்று விளக்கமளித்துள்ளார்.

அன்பு

'ஜெயிலர் 2' மற்றும் ரஜினி மீதான அன்பு

ரஜினிகாந்த் மீதான அளப்பரிய அன்பும் மரியாதையுமே 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

திரைப்படங்கள்

விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த திரைப்படங்கள்

சமீபத்தில் கிஷோர் பாண்டுரங் இயக்கத்தில் உருவான காந்தி டாக்ஸ் என்ற வசனமில்லா திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகும் ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு, சிலம்பரசன் நடிக்கும் அரசன் மற்றும் பாக்கெட் நாவல் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது கைவசம் உள்ளன.

ADVERTISEMENT