Page Loader
விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'மேரி கிறிஸ்துமஸ்' படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எழுதியவர் Saranya Shankar
Dec 25, 2022
10:40 pm

செய்தி முன்னோட்டம்

கிறிஸ்துமஸ் நாளையொட்டி விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ள விஜய் சேதுபதி தற்போது வெற்றி மாறனின் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஹிந்தியில் முதல் படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் மேரி கிறிஸ்துமஸ் படம் அமையப்போகிறது. இதனையடுத்து மும்பைக்கார், ஜவான், காந்தி டாக்ஸ் போன்ற ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்

கிறிஸ்துமஸ் நாளையொட்டி 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஸ்ரீராம் ராகவன் பாலிவுட்டில் அந்ததூன், பத்லாபூர், ஜானி கதார் போன்ற வெற்றிப் படங்களை இயக்குனர். எனவே இவர் இயக்கி வரும் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையொட்டி டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என முன் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் நிறைவு பெறாததால் இந்த படம் 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.