தணிக்கை குழுவின் மறுபரிசீலனைக்கு சென்ற 'ஜனநாயகன்'; பிப்ரவரி 20-ல் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை குழு (CBFC) உடனான சட்ட போராட்டத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது, இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, படம் விரைவில் வெளியாவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. லேட்டஸ்ட் தகவல்படி, பிப்ரவரி 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Vijay | ஜனநாயகன் திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுபியது KVN நிறுவனம்.
— Senthilraja R (@SenthilraajaR) February 9, 2026
இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு… pic.twitter.com/p13sJyeGc0
சட்டப் போராட்டம்
சட்டப் போராட்டம் மற்றும் தணிக்கை மாற்றங்கள்
'ஜனநாயகன்' படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் காரணமாக, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடித்தது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) நீதிமன்றத்தை நாடியது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, தயாரிப்பாளர்கள் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, படத்தை மறுபரிசீலனை குழுவிடம் (Revision Committee) சமர்ப்பித்துள்ளனர். தணிக்கை குழுவின் பரிந்துரைப்படி, படத்தில் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் சுமார் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்தக் காட்சிகள் மாற்றப்பட்ட பிறகு, மறுபரிசீலனை குழு படத்தை பார்த்துவிட்டு புதிய சான்றிதழை வழங்கும். இதற்கான திரையிடல் விரைவில் நடைபெறவுள்ளது.
ரிலீஸ்
பிப்ரவரி 20-ல் ரிலீஸ்?
அனைத்து தணிக்கை நடைமுறைகளும் சுமூகமாக முடிந்தால், பிப்ரவரி 20, 2026 அன்று படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் வெளியாகும் கடைசி படம் என்பதால், திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்த ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மறுபரிசீலனை குழுவின் முடிவைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.