LOADING...
முதல்முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்'! இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்
'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்' என குறிப்பிடப்பட்டு ஜனநாயகன் போஸ்டர் வெளியானது

முதல்முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்'! இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், ரசிகர்களைப் பெரும் வியப்பிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தும் வகையில் "மாண்புமிகு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்" (The Honourable Chief Minister of Tamil Nadu C. Joseph Vijay) என்று அவரது பெயர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தணிக்கை

தணிக்கை சான்றிதழுடன் வெளியான போஸ்டர்

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் இறுதிப் படமான இந்த ஜனநாயகன், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக ஏ சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த தணிக்கை விபரங்களை மிகத் தெளிவாகத் தாங்கி வெளிவந்துள்ள இப்புதிய போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் எந்தவொரு கேப்ஷனும் எழுதாமல் மிகவும் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

Advertisement

ரசிகர்கள் கொண்டாட்டம்

சமூக வலைதளங்களை அதிரவைக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம்

போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே விஜய்யின் புதிய அரசியல் டைட்டிலைப் பார்த்த அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனை லைக்குகளாலும் வாழ்த்துகளாலும் நிரப்பி வருகின்றனர். "ஒருவழியாக நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது" என்றும், "தியேட்டர்களில் இனி ஜனநாயகம் புதிய சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கிறோம் அண்ணா" என்றும் ரசிகர்கள் தங்களது எக்ஸ்பிரஷன்களைத் தெரிவித்து வருகின்றனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், ஜூலை 24 ஆம் தேதி படம் வெளியாகலாம் எனத் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரிட்டனில் ஜூலை 24 க்கான ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement