விஜய்யின் 'ஜனநாயகன்' ரசிகர்களை கவர்ந்ததா? இணையவாசிகள் விமர்சனம் இதோ
செய்தி முன்னோட்டம்
நீண்ட காத்திருப்பு, சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 'தளபதி' விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடி திரைப்படம் ரசிகர்களின் பல மாத எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த படத்தை பார்த்த இணையவாசிகள் என்ன கூறுகின்றனர் என்பது குறித்து ஒரு பார்வை:
கதைக்களம்
கதைக்களம்: பாசமும் அரசியலும் கலந்த மாஸ் என்டர்டைனர்
ஓய்வுபெற்ற காவல அதிகாரியான தளபதி வெற்றி கொண்டான் (விஜய்), தான் வளர்த்து வரும் வளர்ப்பு மகள் விஜி மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார்.
விஜியின் மறைந்த தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கும் போது, வெற்றி எதிர்பாராத சில பிரச்சனைகளில் சிக்குகிறார்.
அங்கே நுழைகிறார் 'ஜான் ஹிம்லர்' (பாபி தியோல்) — இரக்கமற்ற, கொடூரமான வில்லன்.
விஜியை அச்சுறுத்தும் வில்லன் கும்பலை எதிர்த்து வெற்றி எப்படிப் போராடுகிறார், அதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் என்ன என்பதே 'ஜனநாயகன்' படத்தின் கதை.
விமர்சனம்
இணையவாசிகள் விமர்சனம்
பிரபல X பயனர் அமுதபாரதி,"ஒரு பொழுதுபோக்கு முதல் பாதியைத் தொடர்ந்து, OK இரண்டாம் பாதி. படத்தில் வேலை செய்த மிகப்பெரிய காரணி தளபதி மற்றும் மமிதா இடையே உள்ள உணர்ச்சிபூர்வமான தொடர்பு..அடுத்த பலம் அனிருத் இசை, இரண்டு பாடல்கள் மற்றும் BGM ஆகியவற்றின் இடையிடையே கச்சிதமாக இணைந்தது. படத்தின் குறைபாடுகள் வில்லன் பாபிதியோலின் பகுதிகள் மற்றும் கால அளவைக் குறைத்திருக்கலாம்..தளபதி விஜய்யை கொண்டாடும் வகையில் படம் திரையரங்குகளில் பார்க்க தகுதியானது" என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "ஜனநாயகன் படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டேன்" என பதிவிட்டுள்ளார்.