
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன?
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானில், நேற்று இரவு, கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வலைகள் இந்தியாவின் வடமாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதிகளில், கடும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.
தற்போது காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருக்கும் 'லியோ' படக்குழுவினர் நிலை என்ன என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்த போது, தங்கள் நலமாக இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் குழு அறிவித்தது.
'We are safe nanba' என்ற ட்வீட்டுடன், வடிவேலு மீம் ஒன்றையும் பகிர்ந்திருந்தனர்.
படத்தின் கதாசிரியரான ரத்னகுமார், 'Blooody #earthquake' என பதிவிட்டு இருந்தார்.
இந்த அதிர்வலைகள் உணரப்பட்டபோது, படக்குழுவினர் அனைவரும், அவர்களது ஹோட்டல் அறைகளில் பாதுகாப்பாக இருந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
'லியோ' படத்தின் காஷ்மீர் ஷெட்யூல், இந்த வாரம் முடிவடைகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நிலஅதிர்வை உணர்ந்த லியோ குழு
We are safe nanba 😇
— Seven Screen Studio (@7screenstudio) March 21, 2023
- Team #LEO pic.twitter.com/WAOeiP94uM
ட்விட்டர் அஞ்சல்
நிலஅதிர்வை உணர்ந்த லியோ குழு
BLOOODY #Earthquake
— Rathna kumar (@MrRathna) March 21, 2023