Page Loader
2022 ஆம் ஆண்டில் IMDb -ல் இடம் பெற்றுள்ள டாப் 10 வெப் சீரிஸ்
IMDb -ன் டாப் 10 வலைத் தொடர்கள்

2022 ஆம் ஆண்டில் IMDb -ல் இடம் பெற்றுள்ள டாப் 10 வெப் சீரிஸ்

எழுதியவர் Saranya Shankar
Dec 18, 2022
12:24 am

செய்தி முன்னோட்டம்

திரைப்படங்கள், வலைத்தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்களின் அனைத்து தகவலுக்கு பெரும்பாலானோர் தேடும் அதிகாரப்பூர்வ இணையதளம் 'IMDb'. இது இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்பதன் சுருக்கமாகும். 2022-ம் ஆண்டின், இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட முதல் 10 ஆன்லைன் வலைத் தொடர்களை வெளியிட்டுள்ளது. இந்த வலைத்தொடர் பட்டியலை IMDb, 200 மில்லியநுக்கும் அதிகமான பயனாளர்களின் நிகழ் நேர பார்வையை கணக்கில் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் ஜனவரி 1 முதல் நவம்பர் 7 வரையிலான இந்தியாவில் பயனாளர் கொடுத்த ரேட்டிங் மற்றும் வாக்குகள் அடிப்படையை பொருத்தாகும். இதன் அடிப்படையில் 2022-ல் இந்தியாவில் வெளியான வலைத்தொடரில் (web series) எது முதல் 10 இடங்களை பிடித்திருக்கிறது என்பதை பாப்போம்.

டாப் 10 வலைத் தொடர்கள்

2022 -ல் முதல் 10 இடங்களை பிடிக்கும் வலைத் தொடர்கள் (web series)

இந்த ஆண்டு தரவரிசையில் இரண்டாம் பாகங்கள் வெளியான பஞ்சாயத், டெல்லி க்ரைம் மற்றும் குல்லாக் போன்ற வலைத்தொடர்கள் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளன. முதல் இடத்தை பிடித்திருக்கும் வெப் சீரிஸ் நீனா குப்தாவின் 'பஞ்சாயத்'. இது நகைக்சுவை தொடர் மற்றும் இதற்கு கிடைக்க பெற்றுள்ள ரேட்டிங் 8.9 ஆகும். தனுஜ் சோப்ராவின் டெல்லி க்ரைம் 8.5 ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தை ராக்கெட் பாய்ஸ் வலைத் தொடர் பெற்றுள்ளது. இதன் ரேட்டிங் 8.9 ஆகும். 4,5மற்றும் 6-வது இடத்தை ஹியூமன் (7.9),அப்ஹரன் (8.3) மற்றும் குல்லாக் (9.1) பெற்றுள்ளது. 7,8,9 மற்றும் 10-வது இடத்தை NCR டேஸ்(9.1), ஆப்ஹே(8.1), காம்ப்ஸ் டைரி, மற்றும் காலேஜ் ரொமான்ஸ் (8.4) ஆகிய சீரிஸ் பெற்றுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

முதல் 10 இடங்களை பிடிக்கும் வலைத் தொடர்கள்