துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி
தனது அசாத்தியமான நகைச்சுவை நடிப்பினால் தமிழ் திரையுலக ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. தற்போது இவரின் 'நாய் சேகர் ரிட்டன்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையடுத்து திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துள்ளார். கோயிலில் தரிசனம் முடிந்து திரும்பி வந்த வடிவேலுவை ரசிகர்களும், பக்தர்களும் சூழ்ந்துக்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு அவர்கள் திருச்செந்தூர் முருகனை பற்றி கூறினார். இந்த கோவில் மிகவும் சிறப்பம்சம் பெற்றது. எத்தனை மனக்குறைகள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் துணிவு மற்றும் வாரிசு படங்களை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்வி என்ன பதில் அளித்துள்ளார் என்று பின்வருமாறு பாப்போம்.
வாரிசு மற்றும் துணிவு படத்தின் பற்றி வடிவேல் கூறியது
பொங்கலுக்கு வெளியாகும் துணிவு மற்றும் வாரிசு படங்களை பற்றி கேள்வி கேட்க பட்டது. அதற்கு வடிவேலு கூறியதாவது, இரண்டு படங்களுமே வெற்றி அடைய வேண்டும். சினிமா துறை நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். மேலும், நான் எந்த கட்சியிலும், கூட்டணியில் இல்லை. நான் முன்னாடி நடித்த கூட்டணி காமெடி நடிகர்கள் விருப்பப்பட்டால் இணைந்து நடிக்க வேண்டியது தான். சந்திரமுகி -2, மாமன்னன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு புதிய படம் நடித்து வருகிறேன். தற்போது திரையரங்குகளில் நாய் சேகர் ரிட்டர்ன் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு அனைவரும் பாராட்டி வருவதாகவும், இப்படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.