Page Loader
'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது! 
'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர்

'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது! 

எழுதியவர் Arul Jothe
May 31, 2023
03:46 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் நடித்துள்ள 'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், சரத் குமார் என பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்துள்ளார். அப்லாஸ் என்டர்டெயின்ட்மென்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் படம், ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடூர கொலைகளை செய்து வரும் சைக்கோ கொலையாளியை சரத்குமாரும், அசோக் செல்வனும் தேடுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என பேசப்படுகிறது. அசோக் செல்வன் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது பரவலான வரவேற்பை பெற்றுள்ளது .

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post