2022 ஆம் ஆண்டில் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்
2022-ல் அதிகமாக எதிப்பார்க்கப்பட்டு வெளிவந்த டாப் ஹீரோக்களின் படங்கள் பெரியளவு வெற்றியை தராமல் தோல்வியை தந்தன. அதேபோல் பெரிய எதிர்ப்பார்ப்பு மற்றும் நட்சத்திர பலம் இல்லாமல், எந்த ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தாமல் அமைதியாக வந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன. இருப்பினும் சில படங்கள் மிகைப்படுத்தி பேசப்பட்டதன் மூலமாக வெற்றியைப் பெற்றது. அப்படி அதிகமாக மதிப்பிடப்பட்ட படங்கள் என்ன என்பதை நாம் பார்ப்போம். இந்த பட்டியலில் முதல் இடத்தை ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் பெற்றுள்ளது. நாடே பேசும் அளவுக்கு பிரமிக்க வைக்கும் படமாக போற்றப்படும் இந்த காந்தராவின் க்ளைமாக்ஸ் காட்சிகளை நாம் தவிர்த்தால், எல்லாரும் பொதுவாக யூகிக்கப்பட்ட கதைகளத்தை கொண்ட சாதாரண படமாகும்.
காந்தராவை அடுத்து அதிகமாக மதிப்பிடப்பட்ட (Overrated) படங்கள்
அடுத்ததாக கிச்சா சுதீப்பின் நடிப்பில் உருவான விக்ராந்த் ரோணா. வில்லியம் டேவிட்டின் 3D தொழில்நுட்ப ஒளிப்பதிவுக்கள் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்தாலும், பலவீனமான கதைக்களம் தொடர்ந்து படத்தின் ஆர்வத்தை குறைகின்றன. அடுத்தாக தீபிகா படுகோன் நடித்து வெளிவந்த கெஹ்ரய்யான். அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிந்த இந்த படம் நல்ல எதிர்ப்பார்ப்பை பெற்ற போதிலும், அனைவரும் விரும்பும் திரைக்கதையை இந்த படம் பெறவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு திரைப்படம் பிரம்மாஸ்திரா. ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்து இப்படத்திற்கு பலம். ஏராளமான பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இருந்தாலும், படத்தின் எதிர்பார்ப்பை திரைக்கதை பூர்த்தி செய்ததா என்றால் சந்தேகம் தான்.