LOADING...
தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி! ஜீவாவின் சூப்பர் ஹிட் தலைவர் தம்பி தலைமையில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி! ஜீவாவின் சூப்பர் ஹிட் தலைவர் தம்பி தலைமையில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 07, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜீவாவின் 45 வது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அரசியல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இதன் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓடிடி தளம்

எந்த ஓடிடி தளத்தில்? எப்போது?

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த இந்தப் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியுள்ளது. வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்தப் படத்தை ரசிகர்கள் கண்டு மகிழலாம். பொங்கல் ரிலீஸில் வெளியான பல பெரிய படங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் குவித்ததால், ஓடிடியிலும் இதற்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். ஜீவாவுடன் இணைந்து தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கம்பேக்

ஜீவாவின் கம்பேக்

சமீபகாலமாக ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருந்த நடிகர் ஜீவாவுக்கு, இந்தப் படம் ஒரு மிகச்சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. தியேட்டருக்குச் சென்று பார்க்கத் தவறியவர்கள் மற்றும் மீண்டும் ஒருமுறை ரசிக்க விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

Advertisement