Loading...
நெட்ஃபிலிக்ஸ் அதிகாரி மீது எழுத்தாளர் புகார்; டாப்ஸியின் காந்தாரி படத்திற்கு சிக்கல்
டாப்ஸியின் காந்தாரி படத்திற்கு சிக்கல்

நெட்ஃபிலிக்ஸ் அதிகாரி மீது எழுத்தாளர் புகார்; டாப்ஸியின் காந்தாரி படத்திற்கு சிக்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை டாப்ஸி பண்ணு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள காந்தாரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கதை திருட்டு மற்றும் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது. தேவஷிஷ் மகிஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எழுத்தாளர் கனிகா தில்லான் தயாரித்துள்ளார். ஸ்வஸ்திகா முகர்ஜி, மிதா வசிஷ்ட் மற்றும் சாயா கதம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

எழுத்தாளர் குற்றச்சாட்டு

எழுத்தாளர் கல்யாண் பண்டி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு

இந்நிலையில், காந்தாரி படத்தின் கதைக்களம் தான் 2019 ஆம் ஆண்டு முறைப்படி பதிவு செய்த கதையை அப்படியே போன்று உள்ளதாக எழுத்தாளர் கல்யாண் பண்டி குற்றம் சாட்டியுள்ளார்.

கடத்தல் கும்பலிடம் சிக்கிய தனது குழந்தையைக் காப்பாற்றப் போராடும் ஒரு தாய், பின்னர் பேரழிவு தரும் போராளியாக மாறுவதே இதன் மையக்கதை எனக் கூறியுள்ள அவர், இந்த 8 பக்க ஸ்கிரிப்டை அப்போது வூட் நிறுவனத்தில் பணியாற்றிய மோனிகா ஷெர்கில் என்பவரிடம் பகிர்ந்ததாகவும், அவரே தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுப்பு அறிக்கை

தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை

எழுத்தாளர் கல்யாண் பண்டியின் இந்த தீவிரக் குற்றச்சாட்டை தயாரிப்பாளர் கனிகா தில்லானின் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காந்தாரி திரைப்படம் முற்றிலும் அசல் படைப்பு என்றும், அதன் கதை மற்றும் திரைக்கதை முழுவதுமாக கனிகா தில்லானின் சொந்த உழைப்பில் உருவான படைப்பு என்றும் விளக்கம் அளித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த காப்புரிமை சர்ச்சை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT