Loading...
காக்க காக்க, சிங்கம் போல் அல்லாமல் இன்பராஜ் வேற லெவல்! சீன் படம் குறித்து சூர்யா ஓபன் டாக்
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.

காக்க காக்க, சிங்கம் போல் அல்லாமல் இன்பராஜ் வேற லெவல்! சீன் படம் குறித்து சூர்யா ஓபன் டாக்

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
01:13 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் கருப்பு ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள சீன் திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் ரோமான்சம், ஆவேஷம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குறித்துச் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய சூர்யா, படம் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முந்தைய படங்களின் தொடர் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சூர்யாவின் இந்தப் பேச்சு, ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

குடும்ப திரைப்படம்

இன்பராஜ் கதாபாத்திரமும் ஜித்து மாதவனின் யுனிவர்ஸும்

சீன் படம் குறித்துப் பேசிய சூர்யா, "சீன் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடி ரசிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்.

ஜித்து மாதவன் இயக்கிய ரோமான்சம் மற்றும் ஆவேஷம் திரைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அதேபோன்று நான் நடித்த காக்க காக்க, சிங்கம் படங்களுக்கு இடையேயான ஒரு சுவாரசியமான தொடர்பையும் அவர் இந்தத் திரைப்படத்தில் உருவாக்கியிருக்கிறார்.

இருப்பினும், அந்தப் படங்களுடன் இதை நேரடியாக ஒப்பிட முடியாது. இதில் வரும் இன்பராஜ் என்ற கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்ட ஒரு தளத்தில் இருக்கும்.

இது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

நஸ்லின் வில்லத்தனம்

 ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா

இத்திரைப்படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நஸீம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

மேலும், பிரேமலு படத்தின் மூலம் கவனம் பெற்ற இளம் நடிகர் நஸ்லின் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுவரை படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் மற்றும் வில்லன் கதாபாத்திர அறிமுக வீடியோ ஆகியவை ரசிகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆக்சன், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணி கொண்ட ஜித்து மாதவனின் திரைக்கதை பாணி இப்படத்தின் மீதான ஆவலைத் திரையுலக வட்டாரத்தில் எகிற வைத்துள்ளது.

ADVERTISEMENT