
மீண்டும் வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
சுந்தர் சி அடுத்ததாக 'கலகலப்பு-3' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லையென்றாலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க போவதை சுந்தர் சி ஒரு தனியார் ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மற்றொரு படத்தையும் இயக்க உள்ளாராம்.
அதில், அவரே நடித்து இயக்கவுள்ளார். சுவாரசியமாக இப்படத்தில் மீண்டும் வடிவேலு-வை அணுக உள்ளாராம்.
இப்படம் 'அரண்மனை' போலவே திரில்லர் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்படி ஒருவேளை வடிவேலு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் மீண்டும் ஒரு 'வின்னர்' கைப்புள்ள, 'கிரி' வீரபாகு போன்ற சூப்பர்ஹிட் கதாபாத்திரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் கசிந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
வடிவேலுவுடன் இணையும் சுந்தர் சி
Due to the massive Blockbuster of #Aranmanai4, SundarC is now reconsidering which movie to start as his next, is whether #Kalakalappu3 or some other project !!
— AmuthaBharathi (@CinemaWithAB) June 12, 2024
One among them was a movie with #Vadivelu starring alongside #SundarC & Directed by SundarC Himself. Talks going on for… pic.twitter.com/QnO9Yfea3g