NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி
    பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி

    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி

    எழுதியவர் Saranya Shankar
    Dec 25, 2022
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி ஒரு பிரபல பாடகியாவார்.

    ஜே.சி. டேனியல் குறித்து வெளியான மலையாள படமான செல்லுலாய்டில் என்ற திரைப்படத்தில் இவர் பாடிய 'காட்டே காட்டே' எனும் பாடல் இவரைப் பிரபலமாக மாற்றியது.

    பல மலையாள பாடல்களை பாடிய இவர், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த குக்கூ படத்தில் இடம்பெற்ற கோடையில என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

    அதன் பிறகு வீர சிவாஜி படத்தில் சொப்பன சுந்தரி நான் தானே மற்றும் என்னமோ எதோ படத்தில் வரும் புதிய உலகை புதிய உலகை போன்ற ஹிட் பாடல்களை தமிழ் பாடியுள்ளார்.

    பார்வையற்றவரான இவருக்கு 2016-ம் ஆண்டு திருமண நிச்சயமானது. பிறகு மனவேறுபாடு காரணமாக அவர் திருமண செய்ய மறுத்துவிட்டார்.

    வைக்கம் விஜயலக்ஷ்மி

    தன் திருமண வாழ்க்கையை பற்றி வைக்கம் விஜயலக்ஷ்மி கூறியது

    இந்நிலையில் வைக்கம் விஜயலக்ஷ்மி அனூப் என்கிற மிமிக்ரி ஆர்டிஸ்டை 2018-ல் திருமணம் செய்துகொண்டார்.

    சில மாதங்கள் அவருடன் வாழ்ந்த வைக்கம் விஜயலட்சுமி பின்னர் அவரைப் பிரிந்துவிட்டார்.

    இந்நிலையில் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைக்கம் விஜயலக்ஷ்மி தனது திருமண வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.

    அதில் அவர் திருமண வாழ்க்கையில் தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி மலையாள மீடியாக்களில் பேசியிருக்கிறேன்.

    தற்போது இங்கு கேட்டதால் அதை இங்கு கூறுகிறேன் என்று சொல்லி, அவரை முறைப்படி பிரிந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டதாகவும், எதிர்க்காலத்தில் திருமணம் செய்வதை பற்றி ஆலோசிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதனை பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது எனவும், இன்னும் நிறைய பாடல்கள் பாடவேண்டும் என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாடல் வெளியீடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025