நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி
Metoo இயக்கத்தின் மூலம், கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் அளித்தார் பாடகி சின்மயி. இதற்கு மறுப்பு தெரிவித்த வைரமுத்து "என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என அப்போது கூறியிருந்தார். நிச்சயம் வழக்கு தொடருவேன் என கூறியிருந்த சின்மயி அதன் பிறகு எந்த வழக்கினையும் தொடர்ந்ததாக தெரியவில்லை. 2018 நவம்பரில், நடிகர் ராதாரவி மீது பாலியல் தொல்லை செய்தவர் என்று குற்றம் சாட்டிய இரு பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் சின்மயி. இதனையடுத்து அவருக்கும் டப்பிங் யூனியனுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இரண்டு வருடங்களாக உறுப்பினர் கட்டணம் செலுத்தவில்லை என கூறி டப்பிங் யூனியன் அவரை நீக்கி விட்டதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
2024-ல் நடக்க இருக்கும் யூனியன் தேர்தலில் சின்மயி போட்டி
சங்கத்தின் தலைவராக மூன்று முறைக்கு மேல் இருந்து வந்த ராதாரவி மீது பாலியல் புகார்கள் எழுந்தாலும், அதனை பற்றி எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று சின்மயி கூறியிருந்தார். 2020-ல், SICTADAU நடத்திய தேர்தலில் ராதாரவிக்கு எதிராக, சின்மயி தலைவர் பதவிற்காக விண்ணப்பித்தார். ஆனால் தகுதியில்லை என கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் புகார் செய்ய முடிவு செய்திருந்தார், ஆனால் பின்னர் அவர் அந்த திட்டத்தை கைவிட்டார். ஆனாலும் 2024-ல் நடக்க இருக்கும் யூனியன் தேர்தலிலும் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத் துறையில் உள்ள அதிகார ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கிறது என்று சின்மயி கூறியிருந்தார் . நான்கு வருடங்களுக்கு பிறகும், சின்மயிக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.