சீமான்-விஜயலட்சுமி விவகாரம் - ஆலோசனை வழங்க தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகாரளித்தார். மகளிர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதனிடையே விஜயலட்சுமி திடீரென தான் கொடுத்த புகார்களை வாபஸ் பெற்றுள்ளார். ஒருவழியாக பிரச்சனை ஓய்ந்தது என்று நினைக்கையில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி பல வீடியோக்களை வெளியிட்டு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், இவர்களது விவகாரம் குறித்து அண்மையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர், "சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் என்னிடம் நேரடியாக வந்து கேமரா முன் பேசினால் உரிய ஆலோசனைகளை வழங்க நான் தயாராக உள்ளேன்"என்று பதிலளித்துள்ளார்.