Page Loader
'Tiger ka Hukum': ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கள் வெளியானது
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கள் வெளியானது!

'Tiger ka Hukum': ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கள் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

'ஜெயிலர்' திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் பாடல், Tiger ka Hukum தற்போது வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால் மற்றும் பல நடிகர் நடிகையர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. பொதுவாக படத்தின் முதல் பாடலாக, ஹீரோவின் பாடலை வெளியிடுவார்கள். ஆனால், வித்தியாசமான முயற்சியாக, யாரும் எதிர்பார்க்காவண்ணம், முதல் பாடல், தமன்னாவின் 'காவாலா' பாடல் வெளியானது. பாடல் மிகப்பெரிய ஹிட்டானாலும், தலைவர் தரிசனமும், சிலிர்க்கவைக்கும் இசையும் மிஸ் செய்தனர் அவரின் ரசிகர்கள். அந்த குறையை போக்க, தற்போது 'Tiger ka Hukkum' பாடலை வெளியிட்டுள்ளார் படக்குழுவினர்.

ட்விட்டர் அஞ்சல்

Tiger ka Hukum!