'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் தான் 'சர்தார்'. இப்படம் கடந்த 2022ம்ஆண்டு அக்டோபர் மாதம் 21ம்தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியானது. இதில் கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருப்பார், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரித்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளே தமிழகத்தில் மட்டும் 6.4 கோடியும், உலகம் முழுவதும் 9.4 கோடியும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றியினைத்தொடர்ந்து, இதன் 2ம் பாகம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது 2ம் பாகத்தின் படப்பிடிப்பிற்கான பணிகள் துவங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சர்தார்' முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், 'சர்தார்-2' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.