சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா?
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு.
ராஜ்- டிகேயின் வெற்றி தொடரான 'தி ஃபேமிலி மேன்-2'ல், ராஜி என்ற ஈழத்து போராளி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார், சமந்தா.
அந்த வெற்றியை தொடர்ந்து, சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்தாலும், இவருக்கு இருக்கும் டிமாண்ட் அப்படியே உள்ளது.
அதனால் தற்போது அவரது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சிடாடல் எனப்படும் அமெரிக்கன்-ஸ்பை தொடரின் இந்திய பதிப்பில், ராஜ் மற்றும் டிகேவுடன் இணைந்து சமந்தா பணியாற்றவுள்ளார்.
அதற்காக சமந்தா, ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
Samantha's New Project
சமந்தா ரூத் பிரபுவின் புதிய ப்ராஜெக்ட்
பல மொழிகளில் வெளியிடப்படும் இந்த 'சிடாடல்' தொடர், ஒரு பான்-இந்தியா தொடராகும்.
ஆங்கிலத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடித்த 'சிடாடல் ஸ்பின்-ஆஃப்' தொடரைத் தழுவி எடுக்கப்படும் இந்திய பதிப்பில் , சமந்தாவும், வருண் தவானும் நடிக்கவுள்ளனர்.
இதை ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளனர்.
இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், சமந்தா மற்றும் வருண் ஆகியோர் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் லண்டனில் நடந்த இந்த தொடரின் உலகளாவிய பிரீமியரில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சிடாடல் இந்தியா' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துவருகிறார்.