இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ்
இந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் சமந்தா ரூத் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். இது சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் சொல்லி வந்தனர். இதனையடுத்து இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 'என்ன' தேடல் பட்டியலையை கூகுள் நிறுவனம் வெளியிட்டதுள்ளது. இதில் திரைப்படங்கள் மற்றும் நபர்கள் முதல் செய்தி நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் அடங்கும் . அதில் மயோசிடிஸ் என்றால் என்ன ('what is Myositis') முதல் 10 தேடல்களில் இடம்பெற்றுள்ளது.
கூகுளில் அதிகம் தேடப்பட்டமுதல் 10 'என்ன' பட்டியல்
வெளியிடப்பட்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்த கேள்வி 'அக்னிபத் திட்டம் என்றால் என்ன?' மேலும் இப்பட்டியலில் 'வாடகைத் தாய் என்றால் என்ன?' என்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. சமந்தா நடித்த 'யசோதா'வில் அவர் வாடகை தாயாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் 10 'என்ன' பட்டியல் 1) அக்னிபத் திட்டம் என்றால் என்ன 2) நேட்டோ என்றால் என்ன 3) NFT என்றால் என்ன 4) PFI என்றால் என்ன 5) 4 இன் வர்க்கமூலம் என்ன 6) வாடகைத்தாய் என்றால் என்ன 7) சூரிய கிரகணம் என்றால் என்ன 8) பிரிவு 370 என்றால் என்ன 9) மெட்டாவர்ஸ் என்றால் என்ன 10) மயோசிடிஸ் என்றால் என்ன