11 நாட்களில் ₹236 கோடி வசூல்! பாக்ஸ் ஆபீஸில் சூர்யா - ஆர்ஜே பாலாஜியின் 'கருப்பு' திரைப்படம் இமாலய சாதனை
செய்தி முன்னோட்டம்
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. கடந்த மே 14-ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் சில விநியோகச் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போனது. இதனால் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அனைத்துத் தடைகளையும் உடைத்து, கடந்த மே 15 அன்று உலகம் முழுவதும் வெளியான 'கருப்பு', முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வசூல்
10 நாட்களில் ₹250 கோடி வசூல் சாதனை
சுமார் ₹130 முதல் ₹140 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. உலகளவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 'கருப்பு' திரைப்படம் ₹236 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகத் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா, RJ பாலாஜி, திரிஷா, அனகா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.