மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ஆக ரியா சிங்ஹா தேர்வு
செய்தி முன்னோட்டம்
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபஞ்ச அழகியாக குஜராத்தைச் சேர்ந்த நடிகை ரியா சிங்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரியா சிங்ஹா வரவிருக்கும் நவம்பரில் நடைபெறும் உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
அவர் 51 போட்டியாளர்களை முறியடித்து பட்டத்தை வென்றார்.
இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா முதல் ரன்னர்-அப் ஆகவும், சாவி வெர்க் இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Meet Rhea Singha, Miss Universe India 2024 crown winner.#RheaSingha #MissUniverse pic.twitter.com/cqpBeU8DpR
— MR.𝕏 (@nish0015) September 23, 2024
விவரம்
ரியாவின் விவரங்கள்
ரியா சிங்காவின் Instagram சுயவிவரத்தில் , அவர் ஒரு நடிகர், TEDx பேச்சாளர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் எனகுறிப்பிட்டுள்ளார்.
நடிகையும், 2015 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுமான ஊர்வசி ரவுடேலா நிகழ்வின் நடுவர்களில் ஒருவராக இருந்து, சிங்ஹாவிற்கு முடிசூட்டினார், வெற்றியாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "வெற்றியாளர்கள் மனதைக் கவரும். அவர்கள் மிஸ் யுனிவர்ஸில் நம் நாட்டை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவார்கள், மேலும் இந்த ஆண்டு இந்தியா மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வார்கள் என்று நான் நம்புகிறேன்." எனத்தெரிவித்தார்.