Page Loader
காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ 
காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ 

எழுதியவர் Nivetha P
Jul 08, 2023
05:50 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சண்டைகள் நிறைந்த அதிரடி படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'காவாலா' பாடல் லிரிக் வீடியோ அண்மையில் வெளியானது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும்நிலையில், படத்தின் நாயகி தமன்னா இப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவுச்செய்துள்ளார். இது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Instagram அஞ்சல்

'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா