Loading...
பிக்பாஸில் திடீர் மாற்றம்: விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்
இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸில் திடீர் மாற்றம்: விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங்கும் ரம்யா கிருஷ்ணன்

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
02:43 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி, தொண்டைத் தொற்று மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இந்த வார எபிசோடுகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே அவருக்குத் தொண்டைத் தொற்று இருந்த சூழலில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் முழு ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளதால், அவருக்குப் பதிலாக இந்த ஒரு வாரம் மட்டும் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதாகத் தொலைக்காட்சி மற்றும் பிக்பாஸ் தயாரிப்புக் குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரத்திலிருந்து விஜய் சேதுபதி வழக்கம் போல் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

உடல்நலப் பாதிப்பு

மீண்டும் தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன்

கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது விஜய் சேதுபதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, மேடை நிகழ்வுகள் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டன.

அவர் குணமடைய வேண்டி இந்த வாரம் ஓய்வு அளிக்கப்பட்டதால், வார இறுதி எபிசோடுகளை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தயாரிப்புக் குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு இந்த மாற்றத்தை இறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, அனுபவமிக்க மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்காலிகமாக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

முன்னதாக கமல்ஹாசனுக்கு உடல்நலம் குன்றியபோதும் இவர் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT