Loading...
'தர்மன்' படத்தில் இணைந்த ராம் போத்தேனெனி: ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா
தர்மன் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் இணைந்த ராம் போத்தேனெனி

'தர்மன்' படத்தில் இணைந்த ராம் போத்தேனெனி: ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
06:25 pm

செய்தி முன்னோட்டம்

ஜெயிலர் 2 திரைப்படப் பணிகளைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் தர்மன். டிராகன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக படப்பூஜையின் போதே அறிவிக்கப்பட்டது. அதே சமயம், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தேனெனி நடிக்கிறார் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு

ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ராஷி கண்ணா

மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'தர்மன்' திரைப்படப் படப்பிடிப்பில், நடிகர் ராம் போத்தேனெனி இணைந்திருப்பதை உறுதிசெய்யும் புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.

அதில் ரஜினிகாந்த், ராஷி கண்ணா, ராம் போத்தேனெனி மூவரும் இணைந்து போஸ் கொடுத்துள்ளனர்.

ரஜினிகாந்துடன் பணியாற்றியது குறித்துப் பேசிய ராஷி கண்ணா, அவர் படப்பிடிப்பில் நண்பரைப் போலப் பழகியதாகவும், கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளித்து நகைச்சுவையாகக் கலாய்ப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரை அருகில் இருந்து கவனித்ததன் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT