LOADING...
மீண்டும் ரவுடி பேபி காம்போ: சாய் பல்லவியுடன் D55 படத்திற்கு இணைகிறார் தனுஷ்
சாய் பல்லவியுடன் D55 படத்திற்கு இணைகிறார் தனுஷ்

மீண்டும் ரவுடி பேபி காம்போ: சாய் பல்லவியுடன் D55 படத்திற்கு இணைகிறார் தனுஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2026
07:34 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், ஏற்கனவே ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஸ்ரீலீலா சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தற்போது, இப்படத்தில் மற்றொரு நாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'மாரி 2' படத்தில் தனுஷ் - சாய் பல்லவி ஜோடி ஆடிய 'ரவுடி பேபி' பாடல் உலக அளவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணையுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement