
1 கோடி வியூஸ்களை கடந்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் 'Tiger ka Hukum'!
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
'முத்துவேல் பாண்டியன்' என்னும் 'ஜெயிலர்' கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்தின் மெட்டுக்களை, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதல் பாடலான 'காவாலா' மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், 2ம் சிங்கிள் 'Tiger ka Hukum' கடந்த 17ம் தேதி வெளியானது.
இந்நிலையில், தற்போது இப்பாடல் இணையத்தில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயிலர் படத்தின் 2ம் சிங்கிள்
#Clicks | 1 கோடி பார்வைகளை கடந்த HUKUM பாடல்!#SunNews | #Hukum | @rajinikanth | @anirudhofficial | @Nelsondilpkumar pic.twitter.com/ezTaAKE5L2
— Sun News (@sunnewstamil) July 20, 2023