ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பா? இன்று மாலை வெளியாகும் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது என்று ஊடக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று வெளியான ஒரு அறிவிப்பு அந்த யூகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனது X பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இன்று மாலை 7:12 மணிக்கு ஒரு மெகா அப்டேட் வெளியாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் இது ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்புதான் என கூறிவருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Some stories follow the rules.
— Red Giant Movies (@RedGiantMovies_) February 19, 2026
Some films rewrite them.
Stay curious. Stay excited.
Next Drop 7:12 PM! #RedGiant17 ✨ pic.twitter.com/R1Goqiqxnp
விவரங்கள்
படத்தை பற்றி இதுவரை நமக்கு தெரிந்தவை
இந்தப் படத்தை 'ஜெயிலர்' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான புரோமோ படப்பிடிப்பு ஏற்கனவே ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பாக இது உருவாகிறது. கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனமும் இதில் கைகோர்க்க வாய்ப்புள்ளது. De-aging தொழில்நுட்பம் மூலம் ரஜினி மற்றும் கமல் இருவரையும் 80-களின் தோற்றத்தில் காட்ட இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள், 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ள இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.