கார்த்தி -லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' அப்டேட்: கசிந்த சென்சார் சான்றிதழ் உண்மையா?
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜின் 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்' (LCU) தொடங்குவதற்கு காரணமாக இருந்த 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'டில்லி' என்ற பெயரில் ஒரு படத்தின் 30 வினாடி டீசர் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தீயாக பரவி வருகிறது. 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தின் பெயர் 'டில்லி'. தற்போது அதே பெயரில் டீசர் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 'கைதி' படத்தைத் தயாரித்த Dream Warrior Pictures நிறுவனமே இந்த 'டில்லி' படத்தையும் தயாரித்துள்ளது. இதனால் 'கைதி 2' படத்திற்கு 'டில்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், 'கைதி 2' கைவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
What’s cooking, Biryani?
— Gulte (@GulteOfficial) February 19, 2026
The makers of Karthi and Lokesh Kanagaraj’s #Kaithi had their video teaser titled #Dilli censored today. pic.twitter.com/JNkQUb4bRe