சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர்
பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களால் வார தொடர்கதையாக வெளியான புதினம் பொன்னியின் செல்வன். சுமார் 1000 நூற்றாண்டுக்கு முன் சோழ நாட்டின் பேராசை பற்றிய கற்பனை கலந்த வரலாற்று புத்தகமாகும். இந்த புத்தகத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவினால் பல பதிப்புகள் வெளிவந்தன. இந்த புத்தகத்தை மையமாக கொண்டே மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எழுதி இயக்கியுள்ளர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், கார்த்தி,ஜெயம்ரவி,த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், ரகுமான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா போன்றோர் நடித்துள்ளனர்.
காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்
ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் முதல் நாளிலேயே ரூ.80 கோடி வசூலை ஈட்டியது. உலகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, படபிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் காலண்டர்களை நாம் பவுண்டேஷன் சார்பில் சுஹாசினி அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், ஜெயம் ரவி , ஜெயராம், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது சமூக வலைதளத்தில் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.