Page Loader
பொன்னியின் செல்வன் -2 வெளியீட்டு தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் -2 ரீலிஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் -2 வெளியீட்டு தேதி அறிவிப்பு

எழுதியவர் Saranya Shankar
Dec 29, 2022
12:12 pm

செய்தி முன்னோட்டம்

1950 -ஆம் ஆண்டு வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர்கதையாக கல்கி அவர்களால் எழுதப்பட்டது. இந்த நாவலுக்கு கிடைத்த மக்களின் ஆதரவினால் பல பதிப்புகளாக வெளிவந்தன. இந்த நாவலை தழுவி பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மணிரத்தினம் இயக்கிய இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்தது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

ரீலிஸ் தேதி

பொன்னியின் செல்வன் பட குழுவினரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தினை குறித்த தகவல் வெளியாகும் என பொன்னியின் செல்வன் பட குழுவினர் நேற்று அறிவித்து இருந்தனர். அதன்படி இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்த படம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தின் போதே முழு லாபத்தை பெற்றுவிட்ட இந்த படம் 2-ம் பாகத்திலும் அதிக வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பொன்னியின் செல்வன் -2 ரீலிஸ் தேதி அறிவிப்பு