NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
    வாரிசு படத்தின் போஸ்டர்

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

    எழுதியவர் Saranya Shankar
    Jan 05, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் வருகிற பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி வெளியாக இருக்கும் படம் 'வாரிசு.'

    தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான இந்த படத்தை தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை வம்சி பைடிபைலி எழுதி இயக்கியுள்ளார்.

    விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தண்ணா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இவர்களுடன் சரத் ​​குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பு, மகேஸ்வரி, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ரிலீஸ் தேதி

    ட்ரைலரை தொடர்ந்து ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

    இப்படத்தில் வரும் ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா பாடலாக வெளிவந்த சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனையடுத்து வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியது.

    தற்போது இந்த படத்தின் ட்ரைலர் 10 மில்லியனுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.

    மேலும் வாரிசு படம் ஜனவரி 11-ந்தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

    அஜித் நடித்து வெளியாகும் துணிவு படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது.

    தமிழ் திரையுலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் 8 வருடத்திற்கு பிறகு இந்த படங்களின் மூலம் மோதி கொள்வது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாரிசு
    வாரிசு
    விஜய்

    சமீபத்திய

    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்

    வாரிசு

    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    விஜய் தான் நம்பர் 1; உதயநிதி ஸ்டாலினிடம் அதிக திரைக்களை கேட்ட தில் ராஜு தமிழ் திரைப்படம்
    துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் - வடிவேலுவின் சமீபத்திய பேட்டி வடிவேலு
    விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பேட்டி தளபதி

    வாரிசு

    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்

    விஜய்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட் லோகேஷ் கனகராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025