Page Loader
உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம்
உடல் எடையை குறைத்துள்ள நிவின் பாலி

உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம்

எழுதியவர் Saranya Shankar
Jan 04, 2023
01:17 pm

செய்தி முன்னோட்டம்

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் நிவின் பாலி. 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் இவரின் நடிப்பில் பிரேமம் படம் வெளிவந்தது. இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோன்னா செபாஸ்டின் போன்றோர் நடித்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. இதில் நிவின் பாலி, பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் மற்றும் 30 வயது இளைஞன் என வெவ்வேறு காலகட்டத்தை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் அமைந்தன. குறிப்பாக நிவின் பாலி அடுத்தடுத்து நிறைய படங்களின் வாய்ப்பினை பெற்றார்.

உடல் எடை குறைப்பு

25 கிலோ உடல் எடையை குறைத்துள்ள நிவின் பாலி

இவர் கொரோனா லாக் டவுன் நேரத்தில் உடலை பராமரிக்காமல் எடை அதிகரித்து காணப்பட்டார். இந்த காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை அடைந்தது. இதனையடுத்து புதிய படங்களுக்காக தனது உடல் எடையை குறைப்பேன் என அவர் கூறியிருந்தார். தற்போது நிவின் பாலி 25 கிலோ உடல் எடையைக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் "நிவின் பாலி இஸ் பேக்" என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் தற்போது வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது. இவர் தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தாரம், ஆக்சன் ஹீரோ பிஜு போன்ற படங்களிலும் நடிக்கிறார்.