Loading...
தர்மன் படத்தில் இணைந்தார் நயன்தாரா: ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் கூட்டணி
ரஜினியின் தர்மன் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா இணைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தர்மன் படத்தில் இணைந்தார் நயன்தாரா: ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் கூட்டணி

எழுதியவர் Vasuki
Oct 25, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான தர்மன் படத்தில் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். இன்று மாலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டர்மரிக் மீடியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், நயன்தாராவின் கண்களை முன்னிலைப்படுத்தி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவர் இப்படத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

6-வது முறையாக இணையும் ரஜினி - நயன்தாரா கூட்டணி

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

இப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சந்திரமுகி, சிவாஜி, குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

தற்போது தர்மன் திரைப்படத்தின் மூலம் 6-வது முறையாக ரஜினிகாந்துடன் நயன்தாரா கை கோர்த்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT