Page Loader
கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுடன் தன்னை ஒப்பிட்டு வரும் மீம்களுக்கு மிர்ச்சி சிவா பதில்
ரோஹித் சர்மா மீம்களுக்கு மிர்ச்சி சிவா அளித்த வேடிக்கையான பதில்

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுடன் தன்னை ஒப்பிட்டு வரும் மீம்களுக்கு மிர்ச்சி சிவா பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2023
04:39 pm

செய்தி முன்னோட்டம்

'மிர்ச்சி' சிவா நடிப்பில், விரைவில் வெளியாகவிருக்கும் படம், 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்த படத்தில், மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை, லியோன் ஜேம்ஸ். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் பேசிய மிர்ச்சி சிவா, நகைச்சுவையாக பேசிய வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது. சிவா, "என்னையும், ரோஹித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. அதேபோல, என்னைப்போல அவரால் டான்ஸ் ஆட முடியாது" என்று பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிட்டு வரும் மீம்ஸ் பற்றி மிர்ச்சி சிவா