மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்
செய்தி முன்னோட்டம்
'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் ஒரு ரோமாண்டிக் டிராமாவாக உருவாகவுள்ளது. இதில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் படத்திற்கு மணிரத்னம் புதிய இசையமைப்பாளரை தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் தனது 30 ஆண்டுகால 'ரஹ்மான்' கூட்டணியை முறித்துக் கொண்டு, புதிய தலைமுறை இசையமைப்பாளருடன் இணைய போவதாக கூறப்படுவது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்கள்
இசையமைப்பாளர் யார்? - நிலவும் இருவேறு தகவல்கள்
1. சாய் அபயங்கர்: 'கட்சி சேர', 'ஆசை கூட' போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக ஒரு தரப்பு செய்திகள் கூறுகின்றன. இவர் சமீபத்தில் வெளியான ட்யூட் படத்தின் மூலம் பலரை கவர்ந்தார். தொடர்ந்து, கருப்பு, அல்லு அர்ஜுன்- அட்லீ இணையும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்கள் லைனில் உள்ளன. 2. ஏ.ஆர்.ரஹ்மான்: மற்றொரு புறம், இது வெறும் வதந்தி என்றும், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரஹ்மான் ஏற்கனவே இப்படத்திற்காக ஒரு பாடலை மெட்டமைத்து முடித்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன