LOADING...
மணிரத்னம் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்': மீண்டும் இணையும் மெகா கூட்டணி
நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையவுள்ளார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்': மீண்டும் இணையும் மெகா கூட்டணி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையவுள்ளார். இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு பிறகு, மணிரத்னம் நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு காதல் திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருவ் விக்ரம் தற்போது ஒரு அறிமுக இயக்குநரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதால், மணிரத்னம் தனது அடுத்த திட்டத்திற்கு விஜய் சேதுபதியை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நெகிழ்ச்சி

விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

இது குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, "2018-ஆம் ஆண்டே 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் மணிரத்னம் சாருடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், இந்த முறை அவருடன் இணைவது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்ய எனக்கு விருப்பமில்லை, அதனால்தான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை. கலை உலகையே ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது, அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி எனத் திறமையான கலைஞர்கள் ஒன்றிணைவதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே எகிறியுள்ளது. படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement