
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியானது!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக வலம் வந்தார்.
இதையடுத்து அரசியலில் களமிறங்கிய உதயநிதி அமைச்சர் ஆனதால், இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்தார்.
உதயநிதி கடைசியாக நடித்த மாமன்னன் திரைப்படத்தை, கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.
மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், வடிவேலு, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Mamannan Movie
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.
படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை வைகை புயல் வடிவேலுவும் ஏ.ஆர்.ரகுமானும் பாடியுள்ளனர்.
பாடல்கள் இரண்டும் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஹிட்டாகி வருகிறது.
தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளதாக என படக்குழு அறிவித்துள்ளது.
இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இது உதயநிதியின் கடைசி படம் என்பதால் இந்த விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.