இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்திற்குள் சொகுசான 'டீப் ஸ்லீப் ஹோட்டல்' திறப்பு
இங்கிலாந்து விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில், 400 மீட்டர் நிலத்தடியில் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 'உலகின் டீப் ஸ்லீப் ஹோட்டல்' என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் எரிரி தேசிய பூங்காவில் இருக்கும் ஸ்னோடோனியாவின் மலைகளுக்கு அடியில் அமைந்துள்ளது. நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் கொண்ட இந்த ஹோட்டலுக்கு மனதிற்கு பிடித்தவர்களுடன் ஒரு ரொமான்டிக் டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்து தங்கிக்கொள்ளலாம். ஒரு இரவு மற்றும் ஒரு பகல் தங்குவதற்கு மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறது. உயரமான மலைகளுக்கு கீழே 1,375 அடிகள் அதாவது (419 மீ) ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன.
டீப் ஸ்லீப் ஹோட்டலில் தங்க இவ்வளவு விலையா?
இந்த ஹோட்டலை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல. தங்குமிடத்தை அடைய விக்டோரியன் ஸ்லேட் சுரங்கத்தின் வழியாக பயண வழிகாட்டுபவர்களுடன் மலையேற வேண்டும். சுரங்கத்தின் கீழே பயணம் செய்யும் பொழுது பண்டைய சுரங்க படிக்கட்டுகள், பழைய பாலங்கள் என பலவற்றை காணலாம். ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது பயண வழிகாட்டி சுற்றுச்சூழலைப் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார். பயணத்திற்கு முன் ஹெல்மெட், லைட், பாதுகாப்பு உடை மற்றும் பூட்ஸ் ஆகியவை வழங்கப்படும். ஒரு தனி அறையில் இருவர் தங்குவதற்கு ஒரே இரவுக்கு மட்டும் 350 பவுண்டுகள்(ரூ. 36,003) ஆகும், அதே சமயம் ஒரு அரை மற்றும் தனித்தனி கட்டிலுக்கு விலை 550 பவுண்டுகள்(ரூ. 56,577) என நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.