
'லவ் யூ தங்கமே': முதல் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி
செய்தி முன்னோட்டம்
2005ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றவர் நயன்தாரா.
8 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த இவர், கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார்.
மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பல புழ்பெற்ற நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணத்தை மொத்த தமிழ்நாடும் கொண்டாடியது என்று சொன்னாலும் மிகையாகாது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.
Nayanthara Vignesh shivan wedding anniversary
நேத்து தான் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கு! உருக்கமாக பதிவிட்டுள்ள இயக்குனர்
சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடோடு இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பெருமையுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொள்வார்.
இந்த புகைப்படங்களால் இவர்கள் கோலிவுட்டின் க்யூட் கபுள் என்ற பெயரை பெற்றனர்.
இதற்கிடையில், கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
இந்த இரண்டு குந்தைகளுக்கும் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிட்டனர்.
மிகவும் அன்போடும் அன்யோனியத்தோடும் வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட இந்த பதிவிற்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Instagram அஞ்சல்