
நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்!
செய்தி முன்னோட்டம்
இரு தினங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு, காஷ்மீர் மற்றும் டெல்லி வரை உணரப்பட்டது. இது குறித்து அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டு வரும் 'லியோ' படக்குழுவும் பதிவிட்டு இருந்தது.
நிலஅதிர்வு ஏற்பட்டதால், நேற்றைய படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது என செய்திகள் வெளிவந்த நிலையில், படக்குழு, இன்றோடு காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்தே விட்டது.
படப்பிடிப்பு முடிந்த சூட்டோடு, அனைவரும் சென்னைக்கு இன்று மதியம் கிளம்பி விட்டனர். அப்போது படக்குழுவில் சிலர் எடுத்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'லியோ' படத்தின் அடுத்த ஷெட்யூல், சென்னையில் நடைபெறும் என்று செய்திகள் கூறுகின்றன. அதை தொடர்ந்து, ஹைதெராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இறுதி காட்சிகள் அங்கு எடுக்கப்படும் எனவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
காஷ்மீரில் இருந்து கிளம்பிய லியோ படக்குழு
It's a wrap for the #Kashmir schedule of the most anticipated Tamil film in recent times...#Leo full cast crew will reach Chennai this afternoon... The next schedule will start soon... Pooja 2023 grand release... pic.twitter.com/MdiDPlh60g
— AB George (@AbGeorge_) March 23, 2023