
சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் சிறப்புக்காட்சி குறித்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த விபத்து, வழக்கறிஞர்கள் குழு உள்துறை செயலாளரை சந்தித்த பிறகு வெளியில் வந்து ஓட்டுநரிடம் வாகனத்தினை எடுத்து வரும்படி கூறிய பொழுது ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மொபைல் போன் மற்றும் அவரது வாகனம் சேதமடைந்ததாக தெரிகிறது.
ஏற்பட்ட சேதங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக வழக்கறிஞர்கள் உறுதி அளித்ததால் இது குறித்து புகார் ஏதும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'லியோ' பட குழு
#Update | கார் மோதியதில் கீழே விழுந்து லேசாக காயமடைந்த பெண்ணின் செல்போன், வாகனம் ஆகியவற்றின் சேதங்களுக்கு வழக்கறிஞர் குழு பொறுப்பேற்பதாக கூறியதை அடுத்து, புகார் எதுவும் அளிக்கப்படவில்லை https://t.co/xBBG5jYkAI
— Sun News (@sunnewstamil) October 17, 2023